என்னவென்று சொல்லுவேன்-2

என்னவனே.....
மவுன பேழையினை திறக்க சொல்கிறாய்
நீ ஏனோ......
திறந்தால் உன் பெயர்மட்டுமே இருக்குமென்று
எப்படி சொல்வேன் நான்
என் கனவுகோட்டையினை திறக்க சொல்கிறாய்
நீ ஏனோ.....
திறந்தால் அதில் ஆட்சி புரிபவன் நீ மட்டுமே என்று
எப்படி சொல்வேன் நான்
என் கவிதைபுத்தகத்தினை திறக்க சொல்கிறாய்
நீ ஏனோ....
திறந்தால் அதனுள் வார்த்தைகளாய்
கோர்த்து இருப்பவன் நீ ஒருவனே
என்று எப்படி சொல்வேன் நான்
இவற்றை எல்லாம் கேட்கும்
அன்பனே..!!!
ஒரே ஒருமுறை எந்தன் மனதினை
திறந்து பார்க்க சொல்கிறேன்
அப்பொழுது புரியும்
என்றும் என்னுள் சுவாசமாய்
வாழ்பவன் நீயே என்று...........!!!!