விரக்தி வேண்டாம்

விரக்தி ,
இவன் மரணத்தின் தோழன்,
போராட்ட உலகில் போராடும் மனிதன் ,
சாதிக்க தோற்க்கையில் சாக துணிகிறான் !

விரக்தியின் வடிவம்,
வறுமை ,வாங்கி கடன் ,
ஆசைப்பட்ட கல்வி, தேடிய வேலை ,
நோயுற்ற வாழ்வு ,
பட்டியலிட முடியாத இன்னும் எத்தனையோ !

உன்னால் முடியாதது உலகில் இல்லை ,
நம்பினார் வாழ்க்கை கெட்டதும் இல்லை ,
துன்பத்தை வென்று இன்பத்தை தேடி ,
இன்னொரு உலகம் படைக்க பாரு !

வாழ்க்கை என்பது ஆழ்கடல் பயணம்,
மீனும் உண்டு , திமிங்கலமும் உண்டு,
அலையின் ஆட்டம் அனைவருக்கும் பொது
அமைதியாய் இருந்து அனுபவித்து கடத்து!

பிறந்து மடிதல் நீண்ட பயணம் ,
அவசரப்படுதல் இங்கே சலனம் ,
சிலநாள் அழுகை , பலநாள் சிரிப்பு ,
இதுவே தான் வாழ்க்கை பிணைப்பு !

ஏற்றமும் இரக்கமும் வாழ்க்கையில் சகஜம்,
எதிலும் மயக்கம் உனக்கு வேண்டாம்,
வெற்றியும் தோல்வியும் பாதி பாதி,
சமமாய் பார்க்கும் பக்குவம் தேடு !

உனக்கென கடமைகள் ஆயிரம் இருக்கு
உலகம் பெரிதாய் விரிந்து கிடக்கு ,
சிறுமை கொண்ட மனம் வேண்டாம் ,
பெருமை கொள் மனிதன் என்பதற்கு !

நாளை என்பது உனக்கும் உண்டு ,
சாதித்து காட்ட வாய்ப்பும் உண்டு,
நம்பிக்கையோடு பார்த்து காத்திரு ,
இதயத்தை தேற்றி வாழ பழகிடு !

தோல்விகளை எல்லாம் குப்பையில் போடு ,
துன்பம் மறந்து மகிழ்ச்சியில் திளைத்து ,
விரக்தி தனை விரட்டியடித்து ,
புத்துயிர் பெற்று புதிதாய் வா !

தூற்றுவார் வாய் தோற்றுப்போகட்டும்,
வீறுபெற்று நீயும் வீரனாய் வா ,
நடப்பது எல்லாம் நல்லதற்கே என்னும்,
கொள்கையை நெஞ்சிலே பதித்து கொள்ளு !

வெற்றி என்பது நிரந்தமில்லை,
தோல்வி என்பதே இறுதியும் இல்லை,
விரக்தி என்பதை கழிவாய் மிதித்து,
வெற்றியை நோக்கிய சாலையில் பயணி !

மனிதராய் பிறக்க மாதவம் வேண்டும் ,
மரணத்தை வென்று வாழ்ந்தாக வேண்டும்,
மனிதனை கொள்ளும் விரக்தியை கொன்று,
விடியல் படைப்போம் வா வா மனிதா !

உன்னை நீயே தாழ்திக்கொல்லாதே,
உனக்கும் கீழோர் நிலையை பார்த்து,
உன்னை நீயே தேற்றிக்கொள்,
வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்!

எழுதியவர் : வினாயகமுருகன் (12-Apr-13, 2:36 pm)
பார்வை : 530

மேலே