சிவந்த இதழ்களில் ...

உன்னைக் கண்டதும்
நிலவு
வானில் மறைந்தது
என்னைக் கண்டதும்
உன் புன்சிரிப்பு
நாணி இதழில் மறைந்தது.
கண்ணைக் கண்டதும்
ஒரு கவிதை
என்னில் பிறந்தது
அந்தக் கவிதை படித்தபோது
சிவந்த இதழ்களில்
புன்சிரிப்பு மீண்டும் மலர்ந்தது

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Apr-13, 3:47 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 84

மேலே