காய்ச்சல்

"காய்ச்சலா ..?
நேற்று நல்லா தானே துவட்டிவிட்டேன்"
என்று அவள் சொன்னதும்
நான் சிரித்து விட்டேன்...
"என்னடா..???"
என்றாள் முறைப்புடன்...
"மழையால் வந்த காய்ச்சல் அல்ல அது
உன் தாவணி துவட்டலால் வந்த காய்ச்சல்"
*******வெட்கினாள்*******