உடையும் பொருள் ஜாக்கிரதை

"கண்ணாடியோடு" சேர்ந்துகொண்டது
"இதயமும்" உடையும் பொருளாக !

நேசித்த இதயம்
ஏசி வெறுக்கையில் .....

உயிர் நண்பன்
பிரிந்து செல்கையில் .....

உழைத்தும்
வெற்றி கைவிடுகையில் .....

பெற்ற பிள்ளையே
துரத்தும் வேளையில் ........

அன்பிற்க்குரியோர்
இறந்து போகையிலும்
இதயமும் உடையும் பொருளாய் !

எழுதியவர் : வினாயகமுருகன் (13-Apr-13, 3:58 pm)
பார்வை : 451

மேலே