வருக தமிழ்புத்தாண்டே
இவ்வருடத்தின் கடைசி மணி துளிகள்
பழையன கழிதலும் புதியன புகுதலும்
என்ற அடிமை வார்த்தைகள் ஒழியட்டும்
பழையன அறிந்து அதில் தெளிந்து
அவற்றில் புதியன புகுத்தலும்
என்ற சுதந்திர மோகம் பரவட்டும் !!!!!!!!!!
இவ்வருடத்தின் செயற்கை மோகம்
எனும் பூ உதிர்ந்து -உள் பூமியெனும்
வேருக்கு உரமாகி-ஆம் இயற்கை உரமாகி
இயற்கை சீற்றத்தை உருவாக்கிய
செயற்கை சீற்றங்கள் வரும் வருடத்திலாவது
,மறு சுழற்சியினால் மறையட்டும் !!!!!!
அடிமை மோகத்தை அறுத்தெரிந்து
மெஞ்ஞானம் எனும் கதிரொளிதனை
உள் வாங்கி துளிர்த்து அமைதி எனும்
ஆத்மிக பூ நம்மில் மலரட்டும்
மலர்ந்து உதிரா நிலை எய்தட்டும்
வருக வாழ்க ஸ்ரீ விஜய தமிழ்ஆண்டே !!!!!!!!!!