தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்:-

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்:-

சித்திரையே!

சுழலும் பூமியும்; சுழலா கதிரும்
செந்தமிழ் நாட்டில் சந்தித்த
காலகணக்கின் முதல் சாட்சிக்கு
ஆதி தமிழன் ஆசையுடன் சூட்டிய பெயரோ!

வீழ்ந்த கதிரொளி தந்தையாக
தன்னுள் அனுமதித்த பூமி தாயாக
கன்னி தமிழ் பாசத்துடன் பிரசவித்த
தலைமகள் சித்திரையோ!

ஆடும் மாடும் உழைத்த களைப்பை
அசைந்து திண்று கொண்டாட
பள்ளி கூட பசுங்கிளிகளும்
ஆடி பாடி கொண்டாடும் பொழுதல்லவோ!

கழக கட்சிகள் யிரண்டும்
நடத்திய சக்களத்தி சண்டையில்
நின் பிறப்பின் வரலாறு
விலங்காமல் போனதம்மா!

நின் தந்தை சுடரொளி பகலில் சுட்டெரிக்க
நின்தாயும் கோபத்தை இரவில் காட்ட
இரு கழக கட்சிகளும் மின்சாரத்தை கனவாக்க
நினைவுகள் வேகுதம்மா நிஜமாக!

எத்திரையையும் விலக்கும்
கன்னி தமிழின் சித்திரை மகளே!
எங்கள் இரவு நித்திரையை குறைக்கா
வழி யொன்றை செப்பாயோ!

நன்றி

வாழ்க வளமுடன்

ரா.சிவகுமார்

எழுதியவர் : ரா.சிவகுமார் (13-Apr-13, 8:03 pm)
பார்வை : 472

மேலே