காவல் துறை

ஊரை காக்கும்
உடைமைகள் காக்கும்
உயிரையும் காக்கும்
உன்னத பணியில் காவல் துறை ......

கள்வரை மாற்றும்
காவலரும் உண்டு
காவலரை மாற்றும்
கள்வரும் இங்கு உண்டு ......

பொய்யை கொள்ளும் உண்மையும்
உண்மையை கொள்ளும் பொய்யும்
மனிதனை கொன்ற மிருகமும்
மிருகத்தை கொன்ற மனிதனும் உண்டு ......

விடியலும் உண்டு
விடியலை கொள்ளும் இருட்டும் உண்டு
பெண்களை போற்றும் உள்ளமும் உண்டு
பெண்களை கொள்ளும் வன்முறையும் உண்டு ......

சமரசம் செய்த சட்டமும் உண்டு
சமரசமாய் போன சட்டமும் உண்டு
சதிப்பிழைகளும் உண்டு
சந்ததிப்பிழைகளும் உண்டு ......

தண்டனை பெற்ற தர்மமும்
தர்மம் கொடுத்த தண்டனையும்
நீதியை சாகடித்த அநீதியும்
அநீதியை சாகடித்த நீதியும் இங்குண்டு ........

சட்டம் படித்த திருடனும்
திருட தெரிந்த சட்டமும்
வாதிக்க தெரியா நிரபராதியும்
வாதிக்க தெரிந்த குற்றவாளியும் உண்டு .....

நியாயம் தேடி இறந்தவர்களும்
இறந்தவர்களுக்கு நியாயமும் உண்டு
துளைந்ததை தேடி கிடைத்ததும் உண்டு
கிடைத்ததை இங்கு துளைத்ததும் உண்டு ......

எதிரியும் உண்டு
நண்பனும் உண்டு
விடுதலை வாழ்வும் உண்டு
தூக்கில் மரணமும் இங்குண்டு.......

சோதனையும் உண்டு
சோதனைக்குப்பின் சாதனையும் உண்டு
ஏழ்மையை வென்ற பணமும் உண்டு
பணத்தை வென்ற ஏழ்மை இங்குண்டு ........

அமைதியும் இங்குண்டு
போராட்டமும் இங்குண்டு
அடக்கப்போய் அடங்கியதும் உண்டு
அடங்கிப்போய் அடக்கியதும் உண்டு .........

மனிதரும் உண்டு
மகாத்மாவும் உண்டு
மாகாத்மாவை கொன்ற
மனிதரும் உண்டு ........

எழுதியவர் : வினாயகமுருகன் (14-Apr-13, 9:26 am)
பார்வை : 8376

மேலே