குறள் தந்த கவிதை-1

இவ்வுலகுக்கு உயிரான
அய்ம் பெரும் பூதங்களில்
அக்னியை உமிழும் சூரியனே
முதன்மையானது போல்.......
அ' முதல் ' ஃ`' வரை
அவை இல்லையேல்
இல்லையே தமிழுக்கு உயிர்
அந்த உயிர் எழுத்துகளில்
அ'-வே முதல் எழுத்து..
தமிழின் தலை எழுத்து!
இப்படி
உலகை ஆளும் சூரியனையும்
தமிழ் மொழியை ஆளும் அகரத்தையும்
முழு முதற் கடவுளாக வணங்கி....
அய்யன் திரு வள்ளுவரின்
திருக்குறளைப் படித்ததால்
என்னுள் எழுந்த உணர்வுகளை
உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்...
...............................பரிதி.முத்துராசன்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு....குறள்-1
அன்பர்களே!
இவைகள்
அய்யன் வள்ளுவரின்
திருக்குறளுக்கு எழுதிய
விளக்க உரை அல்ல..
குறளைப் படித்ததால் எழுந்த
உணர்வுகளின் பிரதிபலிப்புகள்....)