பிச்சைக்காரகள் நிலை தேவலை
வாழ வீடு தேவை இல்லை
வேலைதேட அவசியம் இல்லை
வருங்கால திட்டமே இல்லை
வீட்டிற்கு வாடகை இல்லை
உணவருந்த செலவு இல்லை
குடும்பச் செலவுகள் இல்லை
கல்விகட்டண கவலை இல்லை
மின்வெட்டு நேரமே இல்லை
வீட்டுவரி கட்ட தேவை இல்லை
குடிநீருக்கும் கட்டணம் இல்லை
பராமரிப்பு செலவுகள் இல்லை
கட்சிகளின் தயவு தேவை இல்லை
அரசியல்வாதிகளின் ஆதரவும்
அவர்களின் மிரட்டலும் இல்லை !
மொத்தத்தில் கையேந்தி நிற்கும்
பிச்சைக்காரகள் நிலை தேவலை !
இதுதான் இன்றைய நம் நிலை !
மறுப்போர் நிச்சயம் இல்லை !
பழனி குமார்