காதலின் ஏக்கம்...................................!!
உன் பார்வை என் மீது
விழாதா? என்று தவிக்கிறேன்.
நான் என் காதலை
எப்படி சொல்லி
உனக்கு புரிய வைப்பேன்
என்று தெரியாமல்
குழம்பித் தவிக்கிறேன்.
நீ வரும் நேரத்திற்காக
காத்திருக்கிறேன்.
நீ வந்த பின்
உன் பார்வைக்காக
காத்திருக்கிறேன்.
நீ பேசும் போது
உன் உதடுகளையும்,
கண்களையுமே
பார்க்கிறேன்.
எனக்கான உன் காதலை
அது,,,
தன்னையும் அறியாமல்
வெளிப்படுத்துமே என்று
எதிர்பார்க்கிறேன்.
நீ மட்டும் அழுத்தக்காரி
அல்ல,
உன் விழிகளும் தான்.
உன்னிடம் ஏதேதோ
பேசிக்கொண்டே இருக்கிறேன்,
நான் உன்னை விரும்புகிறேன்
என்பதை தவிர,
உன்னைக் கண்டதும்
வார்த்தைகள் மட்டும்
அல்ல,,,,,,
அன்பே
என் கண்களும் சதி
செய்கிறது, உன்னை
காண நாணப்படும் போது....
நாணத்தை எனக்கு
அறிமுகப்படுத்தினாய்,
வார்த்தைகளை நீ
எடுத்துக்கொண்டாய்.
ஒரே ஒரு வார்த்தை
கொடு பெண்ணே
என் காதலை உன்னிடம்
சொல்லும் வார்த்தையாக
அது இருக்கட்டும்,,,,,,
இல்லை ...............
ஒரே ஒரு பார்வை
மொழி சொல்லி விடு
இல்லை என்றாவது,,,,
கொல்லட்டுமே அது என்னை..........!!