ஓசை இல்லா அழுகை
எனக்காக எல்லாம் செய்தாய்...
வேண்டும் என்று கேட்பதற்கு
முன் வாங்கிதந்தாய்...
பசிக்கிறது என்று சொல்வதற்கு
முன் உணவளித்தாய்...
அழுவதற்கு முன் கட்டி அணைத்து
ஆறுதல் சொன்னாய்...
தோற்ற போது எல்லாம் துணையாய்
என்னுடன் இருந்தாய்...
வென்ற போது எல்லாம் என்னைவிட
ஆனந்தத்தில் திளைதாய் ...
உயிரினும் மேலாய் நேசிக்கிறேன்
உனையே என் தாயே!
அதனால் தானோ என்னவோ ,
உயிராய் நினைக்கும் என்
காதலனை பற்றி கூற முடியாமல்
தினமும் அழுகிறேன் ஓசையில்லாமல் ...