கவிதை
உளம்சென்று உண்மை விதைப்பது கவிதை
ஒருமுறைக்கு இருமுறை படிப்பது கவிதை
களம்சென்று வெற்றி காண்பது கவிதை
காய்ந்தமன துக்குகளிப் பூட்டுவதே கவிதை
திருமறை போலதினம் படிப்பது கவிதை
தீயனவிலக் கிதீர்வழி காட்டுவது கவிதை
ஒருவாசகம் ஆயினும் திருவாசக மாம்கவிதை
இருள்நீக்கி வெளிச்சம் கூட்டுவதே கவிதை !