புகை பிடிப்பதால் நன்மைகள் புகை பிடியுங்கள் முடிந்தவரை ...
மறைமுக முதலிட்டாளர் ஆகிறோம்
லாபத்தை பெற்று தருகிறோம்
பெட்டி கடைக்காரருக்கும்
அரசுக்கும் நம்மால்
அதனால் விடாதிர்கள் புகைப்பதை
எத்தனை கேவலமான சூழலில் இருந்தாலும்
புகை பிடிப்பதால் அந்த நாற்றம்
பெரியதாய் தெரிய வாய்ப்பில்லை
அதனால் விடாதிர்கள் புகைப்பதை
புகைபிடிப்பதால் மோப்ப சக்தி
உணரும் திறன் குறைவதால்
குறை இருந்தாலும் தெரியாது உணவில்
சண்டை வராது வீட்டில்
அதனால் விடாதிர்கள் புகைப்பதை
திரையில் பார்த்து புகை பிடிக்க
கற்று கொண்டவர்க்கு தெரியாது
அவனிடம் செல்வம் இருப்பும்
நம்மிடம் இல்லாத நிலையும்
அதனால் விடாதிர்கள் பிடியுங்கள் புகையை
சிகரெட்டி புகைக்குள் இருப்பதால்
அடையலாம் தெரியாமல் மறையலாம் புகையில்
கடன்காரர் தொல்லையிருந்து விடுபடலாம்
அதனால் விடாதிர்கள் புகைப்பதை
சிகரெட்டால் நட்பு வளரும்
தீப்பட்டி கேட்கும்போதும்
ஒரே சிகரெட்டை நண்பர் இழுக்கும்போதும்
நம்மை சுற்றி கொசு தொல்லை இல்லை
தனியே கொசு வர்த்தி வாங்கும் செலவு மிச்சம்
அதனை விடாதிர்கள் புகைப்பதை
தொடர்ந்து இருமி தொலைப்பதால்
திருடன் பயமும் இல்லை வீட்டில்
எல்லோருடைய அனுதாபமும் கிட்டும்
அதனால் விடாதிர்கள் புகைப்பதை
சிகரெட்டே பிடிப்பதுமூலம்
முதுமை அடையலாம் சீக்கிரம்
பெரியவர்க்கான மதிப்பு கிடைக்கும்
இன்னும் புகையை விடாமல் இருக்க
யோசிக்கையில் சுட்டது
கையில் சிகரெட்டே விட்டது என்னைவிட்டு
உங்களுக்கு ...................