ஒற்றுமையாய் வாழ்வோம்!!!

வெவ்வேறு நிற
ஆடைகள் அணிந்து
மானத்தை காப்பவரை!
அம்மணமாய் நின்ற
படி அவிழ்த்து
எறியுங்கள் ஆடைகளை
ஒற்றுமை என்பதே
இதுதான் என்கிறது
தலைக்கனம் பிடித்த
தற்குறி ஒன்று!
கற்பழிப்பு நடப்பதே
பெண்ணினம் உயிரோடு
இருப்பதால்தான் கொன்று
புதையுங்கள் பெண்களை
எல்லாம்,கற்பழிப்பு
இனி நடக்காது
என்கிறது கீழ்பாக்கம்
கிறுக்கு ஒன்னு!
பொது நலமாய்
பேசியவன் எல்லாம்
வெறி பிடித்த
மிருகம் என்று
சொல்லி விட்டு
பொது இடத்தில்
வெடிவெடிக்க வைத்து
விட்டு பிணங்கள்
எத்தனை விழும்
என காத்திருப்பவன்
பகுத்தறிவுவாதியம்!
தானே கடவுள்
என சொல்லி
செத்தும் சீரழிந்து
எகிப்தில் இருப்பது
இவனுக்கு எங்க
தெரிய போகுது?
ஒரு கன்னத்தில்
அறைந்தால் மறு
கன்னத்தை காட்டு
வசனம் காது
கொடுத்தாவது கேட்டு
இருப்பானா?
எதை நீ
கொண்டு வந்தாய்
அதை நீ
இழப்பதற்கு எப்பொழுதாவது
சிந்தித்து இருப்பனா?
குழந்தை ஒன்னு
பாலைவனத்தில் சுடுமணலில்
பிறந்து அழ
பெற்றெடுத்தவள் நீர்
தேடி அலைய!
குழந்தை குதிகால்
தேய்த்து அழ
கருணை கொண்ட
இறைவன் அக்குழந்தை
கால் தேய்த்த
பள்ளத்தில் ஜம்ஜம்
நீர் ஊட்று
ஏற்படுத்தி காத்தது
தான் அறிவானோ!
கோவில் என்றால் என்ன?
பள்ளி வாசல் எதற்கு?
தேவாலையம் எப்படி வந்தது?
கீதை என்ன போதிக்கிறது?
குரான் என்ன போதிக்கிறது?
பைபிள் என்ன போதிக்கிறது?
என ஒன்றுமே
தெரியாது ஆனாலும்
இடிப்பேன் கொளுத்துவேன்
என்பது கையை
பலமுறை சுத்தம்
செய்து மலத்தை
தின்னும் ஈ
போன்றதே அன்றி
வேறொன்றும் இல்லை!
அன்பு தோழர்களே வேற்றுமையில் ஒற்றுமை கொண்டு வாழும் நாம் சில விஷ கிருமிகள் செய்யும் சூழ்ச்சியில் சிக்காது
ஐந்து விரல்கள் வெவேறு வடிவத்தில்
இருந்தும் கை ஒன்று என்பதை போல்
ஒற்றுமையாய் வாழ்வோம்
என இறைவனை வேண்டுகிறேன்
-அன்புடன் நவீன் மென்மையானவன்