எனது அரசை கவிழ்க்க உலகில் எந்த நாட்டினாலும் முடியாது - ராஜபக்சே அறிவிப்பு..! இதற்கு என்ன பொருள்..?

எந்த ஒரு வெளிநாடு உதவி செய்தாலும் கூட எனது அரசை கவிழ்க்கவே முடியாது என்று கொழும்பு நகரில் இவ்வாறு கொக்கரித்தார்.

இந்த நாட்டில் சிலர் எமது அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தால் அரசை கவிழ்த்துவிட முடியும் என்று கனவு காண்கின்றனர். ஒரு அரசை கவிழ்க்கும் சக்தி எங்கள் கையில் மட்டுமே இருக்கிறது என்பதை ஏற்கனவே நாங்கள் நிரூபித்தோம். எங்கள் அரசை கவிழ்ப்பதற்கு வெளிநாட்டு உதவியைப் பெற்றாலும் அது பயனளிக்கப் போவதில்லை. அத்தகைய சாதனைகளை நானும் எனது கட்சியும் தான் செய்ய முடியும். அதனால் தான் இன்றும் கூட எனது அரசு வலுவான அடித்தளத்துடன் ஆட்சி செய்து வருகிறது.

இதற்கு முன் தமிழ் நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த அரசியல்வாதிகள், இங்குள்ள நிலைமை குறித்து திருப்தி தெரிவித்து உள்ளனர். தமிழ்நாட்டில் இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றாலும் இந்தியாவுடனான எங்கள் உறவு முற்றிலும் பாதிக்கப்படவில்லை. இந்தியாவுடன் தொடர்ந்து நல்லுறவு வைத்து இருக்கிறோம். அந்த நல்லுறவை மேம்படுத்த தொடர்ந்து பாடுபடுகிறோம்.

இலங்கை அரசு மனித உரிமை மீறல்கள் விசயத்தில் மிகவும் கண்டிப்பாக இருக்கிறது. சில சந்தர்பங்களில் வன்முறைகளை யார் புரிந்தார்கள் என்பதை ஊர்ஜிதம் செய்வதற்கு எவ்வித ஆதாரங்களும் கிடைப்பதில்லை.

அரசு சார்பற்ற அமைப்பை சார்ந்தவர்கள் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை சுமதி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுக்களில் ஏதாவது உண்மை இருந்தால் நிச்சயம் நான் விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்களை தண்டிப்பேன். உதயன் பத்திரிக்கை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து விசாரணை நடத்துகிறோம். விசாரணை முடிந்தவுடன் உங்களுக்கு அறிவிப்பேன் என்று கூறியுள்ளார் மகிந்த ராஜபக்சே...!

இதற்கு பொருள் என்னவாக இருக்கும்..?

இந்திய அரசு இலங்கையில் ஒருவேளை ஆட்சி கவிழ்ப்பு சதியில் இறங்கியுள்ளதோ...?

அல்லது கருணாநிதியின் அரசியலை கையில் எடுத்துக்கொண்டு விளையாடுகிறாரோ..?

அல்லது அடுத்து அமையப்போகும் பா.ஜ.க.வின் அரசாக இருந்தாலும் அவர்களையும் சரி கட்டிவிட்டேன் எனவே, ஆட்சி கவிழ்ப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இருக்குமோ...?

அல்லது மூன்றாவது அணிகள் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைந்தாலும் அங்கும் திமுக தான் பிரதான பங்கு வகிக்கும்...அவர்கள் தான் இலங்கை வந்து எங்களிடம் பரிசுப் பொருட்கள் எல்லாம் வாங்கி அகமகிழ்ந்து பாராட்டியுள்ளார்களே...என்று இருக்குமோ..?

அமெரிக்க ஆதரவு இந்திய சக்திகள் அனைத்தும் பலமிழந்து சீன ரசிய ஆதரவு அரசியல் சக்திகள் புதிய பலம் பெறுவார்கள் என்ற கணிப்பாக இருக்குமோ..?

இவ்வளவு இடியாப்ப சிக்கலையெல்லாம் தாண்டி அமெரிக்காவோ ஏனைய அமெரிக்காவிற்கு குஜா தூக்கும் நாடுகளோ இலங்கையில் ஒன்றும் புடுங்க முடியாது என்று இருக்குமோ..?

உள்நாட்டு அரசியல் கவிழ்ப்பு சதிகள் அனைத்தையும் முறியடித்து விட்டேன் என்ற கொக்கரிப்பாக இருக்குமோ..?

இலங்கையில் உள்ள சிங்கள மக்கள் தன்னை எதிர்த்து போராடும் சக்தி அனைத்தையும் ஒருக்காலும் பெற முடியாதவாறு நசுக்கி,அடக்கி ஒடுக்கி விட்டேன் என்று இருக்குமோ...?

இலங்கையின் எதிர்க்கட்சிகள் மற்றும் இந்திய ஆளும் உயர்மட்ட அதிகார
மையங்களை கப்பல் கப்பலாக பணத்தை கொடுத்து சரிகட்டிவிட்டேன் எனவே...என்று இருக்குமோ...?

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (23-Apr-13, 4:36 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 232

சிறந்த கட்டுரைகள்

மேலே