அழகு பதுமையா?


பெண்ணவள் அழகு பதுமையா?
கர்வ குமரியா?
படித்த குழந்தையா?
போலி மங்கையா?
பேசி பழகினாள்..
அடடா அன்பு செவிலியா?

மனம் விட்டு பேசுகையில்.,
மனதோரம் பாரமில்லை.
உண்மையை சொன்னாலும்
பொய்யொன்றும் தூரமில்லை!

குழந்தைக்கு துயரென்ன?
தெரியவா போகுது?
தெரிந்தாலும் துயரம் தான்
புன்னைகையாய் மாறுது.
சில்மிஷ பேச்சுக்கள்
நட்போடு இழைந்தது.

பிழையோடு பேசும் வார்த்தையும்,
செந்காற்றில் போனது.
தெரியாமல் இந்த உறவை சுற்றி,
பிறார் கண் வேலியானது!
யாருக்கும் தெரியாது
இவர்கள் அன்பு போலியானது!

பிழை செய்ய பார்த்தால்,
நான் கேட்டால்?
இருந்தும் குழந்தை போல்
தலையாட்டி பார்த்தாள்.
என் மனமெங்கிலும் ஒன்றுமில்லை.
அதை உணரும் பக்குவம் இன்று அவளுக்கில்லை.

பிடிக்குமென்று சொன்னேன்.
பிடித்தது, அன்பெனும் பைத்தியம்.
ஓர் சொல்லில் உடைத்தாள்
அது தான் அவள் வைத்தியம்.

என்னோடு..
ஒன்று கூடி பேசினாள்
பிறார் கண்ணும் பரப்பரக்க..
நெஞ்சம் துடிதுடிக்க..

சொல்லாமல் விலகி விட்டால் பெண்மை.
அவள் அறிய மறுத்தாலே,
நடந்த உண்மை!

மன்னிப்பு கடிதம் எழுதி வைத்தேன்.
ஓர் பார்வை பார்த்தால்..
அடடா.! இது காதல் கடிதமென்றெண்ணி
குப்பையில் போட்டால்.?
கசங்கிய கடிதம் சொன்னது..?
பெண்ணே! இது காதல் கடிதமல்ல..
மன்னிப்பு கடிதம்.

அவளோ.. நீ நடித்தது போதும்
இனி எமாற மாட்டேன் என்று முனுமுனுத்தாள்.
தொலைவில் இருக்கையில்
கைபேசி அழைத்தால்?
மறுமுனையில் சத்தம் இல்லை
அவள் எடுக்கவில்லை என்பதில் எனக்கு சித்தம் இல்லை!

போலியாய் ஒரு நாடகம்,
நடப்பதை உணர்ந்தும்..
அதை முடிக்க நினைக்கவில்லை அவளும்.
இன்று ஒன்றும் பேச முடியாமல் நானும்.!

எழுதியவர் : கவிசதிஷ் (6-Apr-10, 9:34 am)
சேர்த்தது : கவி ப்ரியன்
பார்வை : 627

மேலே