ஓட்டாண்டி
எம் எழிலுற்ற பாரதத்தை
துகிலுரித்து கூரிட்டார்.
அற எனும் இயல் கொள்ள
பொருளள்ளி தானிரைத்தார்.
தேரென்னும் ரதம் தல்ல
கைக் கூப்பி தான் கேட்டார்.
வாக் கேட்க - தம் நாக்
கொண்டு பொய் பூசி பார்த்தார்.
கேட்காதோர் பலர் தன்னை
பயம் தந்து பனிய வைத்தார்.
இல்லாதோர் பலருக்கிங்கு
செல்வத்தை தான் திணித்தார்.
வெற்றியின் பக்கத்தில்
வலிகளையும் தான் நினைத்தார்.
பொய் வாக்குத்தி - யாசித்து
தன் மானம் காத்தார்.
தன் மானம் காத்தெந்தன்
தாய் நாட்டை பங்கிட்டார்.
ஓட்டெச்சை வாங்கி தின்று
தலை மேல் ஏறி நின்றார்.
தம் வாக்கென்னும் பலம் - தன்னை
எம் மக்கள் தான் மறந்தார்.
தலை குனிவாம் அன்றாடம்
சோத்துக்கு வாக்குரைத்தார்.
மக்களாட்சி தான் மறந்து
பலியாடாய் தான் விழித்தார்.
ஓசிக்கு செவி சாய்த்து
தினம் ஓட்டாண்டி ஆனார்.
இன்று- நல்லாட்சி வந்தால் தான் - தன்
நிலை மாறும் மறந்தார்.
-