குழந்தை Vs வறுமை

குழந்தை Vs வறுமை
(சென்ரியூ)

எப்படி அடித்தும் உடையவில்லை
எப்படி அழுதும் கரையவில்லை
வறுமை

படிகள் ஏறிக்கொண்டிருந்தாலும்
ஒவ்வொரு படியாய் இறக்கி விடுகிறது
வறுமை...

சிக்குண்டு இருப்பதும்...
சிக்கியிருப்பதும் ஒன்றில் தான்...
வறுமை..

உண்மை, பொய் இரண்டையும்
ஏனோ பங்குபோடுகிறது
வறுமை..

புன்னகையை விற்றாலும்
மனதை புண்ணாக்கி விடுகிறது
வறுமை...

தமிழ்நிலா

எழுதியவர் : -தமிழ்நிலா- (25-Apr-13, 8:41 pm)
பார்வை : 402

மேலே