நினைவு பாலை

வீடு சுத்தம் செய்யும்
நாளில்
தெரியாமல்
கண்ணில் பட்டுவிட்ட
பழைய புகை படம்
கருப்பு வெள்ளை சாலையில்
பின்னோக்கி பயணிக்கும்
மரங்களின்
மௌனங்களை
பூச்செரிந்து சொல்கிறது
பட்டென விழுந்த
ஒரு துளி கண்ணீரால்
நினைவு பாலைக்கு
நீர் ஊற்றியபடி ....

எழுதியவர் : கவிஜி (26-Apr-13, 11:17 am)
சேர்த்தது : கவிஜி
Tanglish : ninaivu balai
பார்வை : 103

மேலே