மா(ல்)நகரம்

ஒரு வார இறுதியின் மாலை வேளையில்...
மால் என்னும் கலாச்சாரம்..
மலிந்துவிட்ட இம் மாநகரத்திலே...

விளக்குகளால் கடை செய்து......
அதன் நடுவே பொருள் வைத்து...
போவோர் வருவோரை...
புது மோகம் கொள்ள செய்து....

வேண்டா பொருளின்
பொருந்தா விலைக்கு..
அவர்களை நுகர்வோராக்கி...

விற்பனை பிரதிநிதியின்...
நுனி நாக்கு ஆங்கிலத்திற்கு மயங்கி...
சத்தியம் வாங்கா குறையாய்...
விலையை கேட்டு..

150 சதவீத லாப விலைக்கு..
20 சதவீதம் தள்ளுபடி தரும் இக்கடையை..
தேடி தேடி தேர்ந்தெடுத்த..
பெருமை எண்ணி...

கடன் அட்டையை..
கச்சிதமாக தேய்த்துவிட்டு..
பொருளுக்கும் பொருள் கொண்ட பைக்கும்..
பணம் வார்த்து வரும்..

அத்தம்பதி சமேதரை நோக்கும்கால்...
"ஊரோடு ஒத்து வாழ்"
என்னும் பள்ளி பாடங்கள்....
காட்சிகளாய் கடந்து போகின்றன....

எழுதியவர் : பாரதிசரண் (26-Apr-13, 12:31 pm)
பார்வை : 95

மேலே