விதை
விதை நான்
மழை நீ
உன்னால் தான் முளைத்தேன்
மரம் நான்
வேர் நீ
உன்னால் தான் வளர்ந்தேன்
மலர் நான்
சூலகம் நீ
உன்னால் தான் கனியானேன்
கனி நான்
சுவை நீ
உன்னால் தான் விரும்பப்படுகிறேன்
முதிர்கனி நான்
முழுவிதை நீ
உன்னால் தன முளைப்பேன்
மீண்டும் உன்னால் தான் முளைப்பேன்