தினம் தினம் வந்துவிழுகின்றன ஆயிரமாயிரம் கவிதைகள்!

என் சில்லறையைத் தின்றது
நான் சற்றுமுன் வாங்கிய‌
இரண்டு ரூபாய் வாழைப்பழம்!

அந்த வாழைப்பழத்தையே தின்றது
என்னை யறியாமல் பறித்து
அருகே நின்றிருந்த கருங்குரங்கு!

அதெறிந்த தோலைத் தின்றது
தோலிடத்தில் தோன்றிய வாசனையில்
மயங்கிவந்த எறும்புக் கூட்டம்!

எறும்புகளை தின்னக் காத்திருக்கிறது
சூரியனால் பிறந்த சுட்டெரிக்கும் வெயிலும்
மேகத்தினால் பிறந்த மூழ்கடிக்கும் மழையும்

சூரியனையும் மேகத்தையும் வெயிலையும் மழையையும்
தின்று தின்று தினம் தினம்
வந்துவிழுகின்றன ஆயிரமாயிரம் கவிதைகள்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (27-Apr-13, 1:42 pm)
பார்வை : 90

மேலே