நிற ஆயுத பாணி
போதையில் மிதிக்க
பேதை தடுக்காது
வாங்கிக் கொள்கிறாள்,
அடி,உதைகளை.
அழுகையும்,ஓலமும்
அன்றாட காட்சிகள்,
குறுத்தோலை கிழிக்கும்,
கத்தி கையில்,
திருப்பி பிடிக்க பிடிக்காது,
நொடி யோசனையில்
ஏனோ?
சாராய நெடி பிடித்தோ
என்னமோ!!
வாய்க்கொடுத்தேனும்
வாங்கி கட்டிக் கொள்கிறாள்
வசவுகளை,
வதைகளையும்,
சம்பவங்கள் சகித்து
சகித்து பழகியே
அடிவிழாத நாளில்
நரகில் வாழ்கிறாள்,