வாழ வைக்கும் காதல்!!!
மணம் முடித்தாகி
விட்டது ஆனால்
இன்றுதான் சொல்லப்போகிறேன்
என் காதலை!!!
தனிமையில் ஒரு
பெண்ணோடு,காதல்
என்ற போர்வையில்,
பூங்கா புதர்களுக்குள்
மறைந்த,கடற்க்கரை
படகுகளுக்குள் ஒளிந்த
அனுபவம் இல்லை
அது எனக்கு
தேவையும் இல்லை!!!
நானும் என்
மனைவியும் தனிமையில்
இருந்தால் பார்த்து
குறும்பாய் சிரிக்கிறார்கள்
பெற்றவர்களும் பெரியவர்களும்!!!
காமத்தை பற்றி
தெரிந்து கொள்ள,
திருமணத்துக்கு முன்
முயற்ச்சித்தது இல்லை,
இன்றோ சிந்திக்கக்கூட
இடமில்லை,கட்டில்
நிறைய பிள்ளைகள்!!!
காவல் நிலையங்கள்,
நீதி மன்றங்கள்,
கண்டதில்லை நாங்கள்!!!
நானே சிவன்,
அவளே சக்தி,
சுற்றமும்,சொந்தமும்,
நட்பும்,விருந்தளித்து
கொண்டாடும் எங்களை!!!
கற்பு,சுயமரியாதை
எப்பொழுதும் எதற்காகவும்
இழந்ததில்லை நாங்கள்!!!
துக்கங்களும் அவமானங்களும்
மறந்தும் தொட்டதில்லை
எங்களை!!!
பெற்றவர்களின் ஆசி,
பெரியோர்களின் ஆசி,
நண்பர்களின் வாழ்த்து,
எங்கும் எப்போதும்
என்றென்றும் வேண்டுமா?
பெரியோர்கள் முறைபடுத்தி
நிச்சயப்படுத்திய திருமணம்
செய்து பாருங்கள்!!!
மனைவியை மட்டும் காதலியுங்கள்!!!
அன்புடன் நவீன் மென்மையானவன்

