என் மரணமும் வாழ்வும் உன் வரவில்....
உறவுகள் பல
என்னை தொடர ...
எந்தன் பயணமோ
உன்னை தொடர ....
உந்தன் பாதையோ
வேறு உறவை தொடர ...
திசை தெரியா
இருட்டில் நான்....
உன் வரவோ வெளிச்சத்தை
தரும் என எண்ணி காத்திருக்கிறேன் ...
விடிந்தும் விடியல்
உணரா ஓர் ஜீவனாக...
நம் காதல் நினைவுகளை எண்ணி
இவள் இதயம் துடிப்பதை
மறந்து துடிக்கும் உன் இதயம்...
என் கண்ணீரால் கூட
என் காதலை உணராத உன் உள்ளம்....
உன் மௌனம் என்னை
கொஞ்சம் கொஞ்சமாக கொல்ல
செத்துக்கொண்டிருக்கிறேன் ...
ஒவ்வொரு நொடியும் என்னுள்....