ஆனால் என்றும் என்னுள் நீ,
எதுகை மோனையோடு எழுத,,,
என்னுள் வார்த்தையில்லை,,
கண்ணே கனியமுதே என்று
ஆறுதல் படுத்த நான்
இப்போது அருகிலும் இல்லை,,
இதயமாய் நீ இருக்கும் போது
உனக்கெதற்கு என் இதயம்..
தென்றல் காற்றாய்,,
சிலுசிலுக்கும் பனியாய்,,
சில சமயங்களில் காட்டாறாய்,,
எதையும் எதிர் பார்க்காத மேகமாய்,,
உனக்குள் மட்டும் எப்படியடி
இத்தனை அவதாரம்,,
அதனால் தானோ என்னவோ
தமிழ் அன்னை உனக்குள்
மட்டும் குடிபுகுந்தாள்,,
கவிதையே,,தமிழ் கவிதையே
என்னை கவிதை பாட சொன்னால்
நான் எங்கே செல்ல..
உன்னை போல் கவிதை பாட
நான் ஒன்றும் தொடர்வாக்கியமல்ல,,
வெறும் முற்றுபுள்ளி
ஆனால் என்றும் என்னுள் நீ,,,