நாம் வாழும் காலம் வரை

"வேறு வேறான
பாதைஹளில்
பயணித்துக் கொண்டிருந்த
நாம் இப்போது
ஒரே பாதையில்
சென்றுகொண்டிருக்கிறோம்,
இந்த வசந்தகால
நியாபகச் சேமிப்புக்கள்
நாம் வாழும்
காலம் வரை
மெல்லிய தென்றலாய்
வீசிக்கொண்டே இருக்கும்,
முட்களாய் சிலநேரமும்,
பூக்களாய் சிலநேரமும்
நாமிருவரும் மாறிய
சந்தர்பங்கள்,
ஒருவரின் துன்பங்களை
மற்றவர்
இன்பங்களாய் மாற்ற
முயன்ற கணங்களும்,
என்னுடைய வலிகள்
உன்னுடைய கண்களில்
கண்ணீராய் இருந்த
நொடிகள்,
உன் வெற்றிகளை
என்னில் - நீ
கண்டு ரசித்த
கணங்கள்,
பசுமரத்தாணி போல
என்றென்றும் எம்மில்
பதிந்து இருக்கு

எழுதியவர் : senthil (1-Dec-10, 4:12 pm)
சேர்த்தது : senthilsoftcse
பார்வை : 490

மேலே