மரணமே என்னை ஏற்றுகொல்வாயா 555
![](https://eluthu.com/images/loading.gif)
வாழ்க்கை...
வாழ்கையை வாழ்ந்து
பார்க்க ஆசை...
வாழ
தெரியவில்லை...
வாழவும்
பிடிக்கவில்லை...
வலிகள் மட்டும்
வாழ்க்கையா...
வாழ்வில் வலிகள்
என்றால் வாழலாம்...
வலியே வாழ்கை
என்றாய்...
வாழ்வது எப்படி...
முதல் குரல் கொடுத்தபோது
மரிதிருந்தால்...
வாழ்வில் அழுகுரல்
கேட்டு இருக்காது...
யார் செய்த பாவமோ
என்னுள் என்னை...
உயிர் கொடுத்தோரும்
உடன் பிறந்தோரும்...
என்னை புரிந்துகொள்ளாமல்
போனதால்...
கலக்கம் இல்லை...
உடன் இருந்தோர்கள்
கூட என்னை...
புரிந்து கொள்ளாமல்
வதைப்பது...
வாழ்வில் வாழ
ஆசை இல்லை...
காதல் மரிதபோதும் என்
கண்ணீரை சிந்தவில்லை...
வாய்விட்டு
அழவில்லை...
வாய்விட்டு அழாமல்
என் மனதுக்குள் அழும்...
என் குரல் யாருக்கு
கேட்கும்...
உயிர்விடும் வினாடி
கூட வாழ நினைக்கும்
மானிடர்கள் பல...
மரணத்தை எதிர்
நோக்கி...
வாழ்கின்ற
வயதில் நான்...
மரணமே என்னை
ஏற்று கொள்வாயா...
வலிதாங்க என்னுள்
வலிமை இல்லை மனதில்...
அவளையும் மரணத்தையும்
எதிர்நிக்கி நான்....