தாத்தாவும் அந்த நாயும்...
![](https://eluthu.com/images/loading.gif)
விடி காலையிலே
நடக்கத் தொடங்கிவிட்டார்கள்
மடித்துக் கட்டிய வேட்டியும் துண்டுமாக அவரும்
வாலில் சலங்கையை கட்டிக் கொண்டு துள்ளலுடன் அதுவுமாக
நடக்கத் தொடங்கிவிட்டார்கள்...
அவரை சுற்றி ஓடிக்கொண்டு
அவரின் கால் செருப்பை கவ்வுவதாக பாவனை செய்துக் கொண்டு
பக்கவாட்டில் ஓடி அவரின் முகம் பார்த்து சிரித்து கொண்டு
சிறிது தூரமாய் ஓடி போய் நின்று
அவர் அருகில் வந்தவுடன்
இன்னும் சிறிது தூரம் ஓடிப் போய் நின்று
அந்த விளையாட்டை தொடர்ந்துக் கொண்டு...
அவரின் கவனியாமை கண்டு
அவரை முன்னால் போகவிட்டு
நின்று கொண்டது சிலையாய்
அப்படியும் அவர் அதை சட்டை செய்யாமல் செல்ல
மறுபடியும் ஆரம்பித்தது தன் சேட்டையை முதலிலிருந்து...
அவர் நடந்துக் கொண்டேயிருந்தார்
நான் உன் எஜமான்
என்கிற தோரணையில்....