உடலினைப் போற்றுவோம் [1]
உறுப்புகள் விற்பனைக்கு
***********************************
ஒரு இதயம்
இன்னொருவருக்கு
மறு வாழ்வாகிறது
இரு விழிகள்
அடுத்த இருவருக்கு
பார்வையாகிறது
இரு சிறுநீரகம்
இரு உடலின் இயக்கத்திற்கு
ஆதாரமாகிறது
சரி
இவனுடைய ஆன்மாவை
[அல்லது உயிரை]
எவன் பெறுவது
என்ன செய்வது?
இவனின் நீள் மௌனம்
மரணத்தின் அறிகுறியா?
இவனின் தொடர் மயக்கம்
மரணத்தின் எல்லையா?
உடம்பில்
உயிர் பிரிவதன்றோ
இறப்பு
மூளை மழுங்குவதா
இறப்பு?
இயங்காத உடம்பால்
என்ன பயன் என்று
கேள்வி வருகின்றதோ?
ஓ
அதனால்தான்
நடைப்பிணங்கள்
விற்பனைக்கு வருகிறதோ?
எச்சரிக்கை !
மருத்துவ மனைக்கு
செல்லும் முன்
நீங்கள் நினைவுடன்
திரும்பி வரவேண்டும் என்று
வேண்டிக் கொள்ளுங்கள்
நீங்களும் மயங்கிட
நேர்ந்தால்
உங்கள் ஆன்மாவும்
அனாதையாக்கப்படலாம் !