நானுந்தான்,,,

தெரிகிறது
எப்படியும்...
இப்படித்தான் முடியும் என்று.

ஒதுங்கி நிற்கலாம்
முடிவெடுத்தாலும் ...
இழுத்து வந்து விடுகிறது
அந்த ஆசை அலைகள் !

தேடித் ....தேடிப் பார்க்கிறேன் பெண்களிடம்...
பொன் நகையை சுமந்தாலும்
அவர்கள்
தொலைத்துவிட்ட புன்னகையை ...

அம்பலத்தில் ஆவேசமாய் பேசிவிட்டு
அறைக்குள் வந்தபின்தான்
என்செயல் என்னிடம் சொல்கிறது..
உபதேசம் உனக்கல்ல என்று ;

புரிகிறது..
நிழலோடு போடும் சண்டையில்தான்
நானும் ;.

சொல்லுக்கும்...
செயலுக்கும்..
வாழும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை ...

பயணங்கள் விரித்த பாதையில் .....

கரை தொட்ட அலைகள்
மணல் வெளியில்
தேடி...தேடி.. தோற்பதை போல

மனம் சுமக்கும்
சூன்யத்தில் நனைந்த்தப்படி

நின்று கொண்டிருக்கிறேன் ...
நானுந்தான் ..

எழுதியவர் : ந.ஜெயபாலன்,திருநெல்வேலி -6 (1-May-13, 4:42 pm)
சேர்த்தது : na.jeyabalan
பார்வை : 69

மேலே