அன்பான ஒரு தோழி

பெற்ற தாய்
வளர்த்த தந்தை
உடன் பிறந்த சகோதரன்
அடுத்ததாக தோழி என்கிற சினேகிதி !

ஒன்றாய் சேர்ந்து கற்ற பாடம்
தத்தி தத்தி தொடர்ந்த மிதிவண்டிப்பயணம்
பகிர்ந்து உண்ட மதிய உணவு
பிரிய மனமில்லாத மாலைப்பொழுது !

பள்ளி
கல்லூரி
பனி செய்யும் இடம் வரைக்கும்
ஒன்றாய் தோழியாய் !

மாறி உடுத்திய வண்ண உடைகள்
ஆசையாய் பகிர்ந்த அழகு உபகரணங்கள்
நேசத்தோடு வாழ்த்திக்கொடுத்த பரிசு பொருட்கள்
பாசமாய் கிடைத்த அக்கறைகள் !

இன்பத்தில் சிரித்த சகசிரிப்பு
துன்பத்தில் இருந்த அரவணைப்பு
தோல்வியில் கிடைத்த ஊக்கம்
வெற்றியில் கிடைத்த முத்தம் !

இரவு உறங்கும் முன்
அழகாய் உரையாடலும் குட் நைட்டும்
விடிந்ததும் விடியாததும்
தொலைபேசியில் காலைவணக்கம் !

எல்லை இல்லா அன்பும் அக்கறையும்
நெஞ்சம் இனிக்க பேச்சும்
மனம் இனிக்கும் நட்பும்
பகிர்ந்துகொண்ட பகலும் இரவும்!

என்றும் மாறாத பசுமை நினைவுகள் அது
மறக்க முடியாத மறுக்க முடியாத உறவு அது
காலம் மாறும் காட்சிகள் மாறும்
உயிரிருக்கும் வரை தொடரும் உறவு அது !

சாதனைகள் எதுவாக இருந்தாலும்
என் சாதனைகளின் சக்தி அவள்
என் வெற்றி என்று எதுவும் இல்லை
எல்லாம் அவளுக்கே சமர்ப்பணம் !

பெண்ணாய் பிறந்த தோழி அவள்
நான் வாழ்வில் கண்டெடுத்த பொக்கிஷம்
என்னிலை போயும் அவளை மறவாது
உள்ளமே வேண்டும் இறைவா கொடு !

எழுதியவர் : அம்முகுட்டி (1-May-13, 10:38 pm)
Tanglish : anpana oru thozhi
பார்வை : 1184

மேலே