எனது குறிப்பேட்டின் பக்கங்கள்...[7]
கனவுகளை
விதைத்தாகி விட்டது
நினைவுகளாக முளைக்கும் என்று
கற்பனைப் பயணத்தையும்
தொடர்ந்தாகி விட்டது
உன் துணை கிடைக்கும் என்று
ஒரு கல்லைப் போல்
உன் வழியில் கிடக்கிறேன்
உன் பார்வை பட்டு
உயிர்ப்பேன் என்று
எதிர்பார்ப்புகளுடன்
புரட்டிப் பார்க்காத
புத்தகமாகக் கிடக்கிறேன்
படிக்க மனது வைப்பாய் என்று
பொறுமையும்
இப்போது தவமாய் மாறியது
நீ புரிந்து
கடைக்கண் திறந்திட
மனம் கனிவாய் என்று
காத்திருத்தலும் தொடர்கிறது
தமிழை பிழையின்றி
எழுதத் தெரியாத நான்கூட
கவிஞன் ஆனதை
பாராட்ட
கனி- வாய் திறப்பாய் என்று
சரி......
இதெல்லாம் என்று ?
என்னுடைய தாடி
ஜடை பின்னும் அளவு
வளர்ந்த பிறகா ?
அல்லது
நான்
காவி புனைந்து
காசி போன பின்பா??
[16]
************
[பக்கம் .8....... தொடரும்]