நினைவுகள்....

யாரையும் நம்புவதில்லை
எதற்கும் அழுவதில்லை
குற்றவுணர்வுகளை சமநிலையில் வைக்கிறேன்...
துணைக்கு புத்தகங்களும்
விதிகளை மீறுவதற்கு- சில
சமயம் உறுதியும் துணையிருக்கிறது....
இருந்தும் எவ்வளவு செய்தும்
நினைவுகள் இன்னமும் இருக்கிறது -அது
உன்னை எப்பொழுதும் அழைத்து வருகிறது
எப்போதும் இருக்கிற இந்த வெயிலைப்போல
எப்பொழுதாவது வருகிற இந்த மழையும் கூட...
தவிர்க்க முடியாமல் நினைவுட்டுகிறது...
ஒப்புக்கொள்ளாத இந்த மனம்
இருக்கட்டுமென சொல்லிக்கொண்டிருக்கிறது.....

எழுதியவர் : இவள் (2-May-13, 6:55 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 183

மேலே