உன் நினைவுகள்

என் கவிதைகளை படித்த
அனைவரும் கேக்கிறார்கள்
உன் மனதில் நுழைந்த அவன்
யார் எண்டு .......
நானோ .....
அந்தப் பெயரில் எந்தப் புயலும்
இன்னும் என்னை தாக்கவில்லை
என்றே சொல்லி வருகின்றேன்
யாருக்குத் தெரியும்
நீ தான் அந்தப் புயல்
என்று.......