பாசி படித்துறை நண்பனே (2)

மாட்டை பிடித்துதான் அவன் பெயர்,
மகராசன் மீண்டும் வந்திட்டான்,
மறைந்து கொள்வதற்காய் மறுபடியும் ஓடினேன்,
மரத்தின் பின் நின்று மனகிளர்ச்சி கொண்டிட்டேன்,

இரண்டு மாட்டையும் சேர்த்து பிணைத்திட்டான்,
எதிரில் இருக்கும் வேரடியில் இழுத்து கட்டினான்,
நாற்றமடிக்கும் வயிற்றை பிடுங்கும் நடந்து செல்வோருக்கு,
நல்லது செய்வேன் என்று பாம்பை அவன் தூக்கிட்டான்.

செட்டிகுட்டையின் சூரை முள் புதரில்,
சென்று அவன் வீசிட்டான் பாழடைந்த கிணற்றில்,
பதறி நான் போனேன் பதுக்கி இருந்தே,
பயித்தியம் பிடிக்குமென வேறோர் வழியில் சென்றேன்.

இடையில் இருந்த பனைமரத்தை பார்த்திட்டேன்
எனது தலையினில் மெல்ல நான் கை வைத்தேன்
வலிக்கும் பஞ்சை நான் வருடியும் பார்த்தேன்
வடிந்த இரத்தத்தை கொஞ்சம் நான் யோசித்தேன்

பனங்கொட்டை பொறுக்கி பந்தை நாம் அடித்தோம்
பார்த்த மட்டைபந்தில் சச்சினாய் நடித்தோம், நீ
அடித்த பந்து ஆறுக்கு பறக்காமல் நேற்று ,
ஆவேசமாக என் மண்டையை பிளந்தது.

ஆவென்று அலறி துடித்தேன், ஆருயுர் நண்பனே!
ஆபத்தை உணர்ந்திட்டாய், ஆடை அவிழும் கையென விரைந்தாய்,
கோரை பிடுங்கி நீ கொட்டும் என் இரத்தத்தில் நான்
கோபப்படுவேன் என்று நீ அழுது அதன் சாற்றை ஊற்றினாய் ........

( தொடரும் )



எழுதியவர் : . ' . கவி (2-Dec-10, 3:53 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 375

மேலே