தோழியே
தோழியே
என் தோழியே
ஒரு வார்த்தை பேசுவாயா?
பேசினால் பிழையில்லை
உணர்து கொள்ள வருவாயா?
என் நட்பெனும் விலும்பினிலே
நீ நடந்திடும் போதினிலே
என் அன்புன்னை மீட்டிடாதா?
உன் நட்பினில் வாழ்ந்திடாதா?
உனக்கும் பிடித்திருந்தால்
அதை உள்ளம் உரைத்திருந்தால்.?
மறைத்திட வேண்டுமா? நட்பு
கொள்ளவே!
யாரும் சொல்லி என்ன?
பல பேரும் உன்னை என்ன?
பிழைகளை மறந்து - நீ நட்பில் சேரவா!
நீ நான் என்று தோன்றும் நேரம்
நீளும் உயரமே.
நாம் தான் என்று சொன்னால்
அதில் நம் நட்பும் வாழுமே!
கள்ளம் கபடமில்லா
உள்ளம் சொல்லும் நட்பு
உடலினில் ஓடிடும் நரம்பை
போன்றதன்றோ!
பொய்கள் பூசி பேச
வெறும் வார்த்தை மட்டும் போதும்
நட்பெனும்
வீதியில் போக வேண்டுமன்றோ?
அன்பெனும் கண்ணியத்தோடு
காத்து நிற்கும் நட்பு.
அதில் பிழை தன் என்று வந்தால்
பெண் தான் அதற்கு
பொறுப்பு!