கடவுளை தேடும் கோவில்-தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வீடு
![](https://eluthu.com/images/loading.gif)
இன்றோ
நாளையோ
இப்போதோ பிறகோ
என்றாவது ஒரு நாள்
என்னை தேடி நீ வருவாயா?
யார் யாரோ
வருகிறார்கள் போகிறார்கள்.
என்னை பார்த்து பலர் அழுவார்கள்.
சிலர் வியப்பார்கள்.
புரியாத முகங்கள், அறியாத பாஷைகள்..
கர்ப்பக்கிரகமே! உன்னை இழந்த நான்
இன்று காட்சிப்பொருளாக..
உயிரின் கடைசி இழையில்
ஊசலாடும் சாளரக் கதவுகள் ஊடாக
எருக்கலைபூக்களை தழுவி வரும்
அந்த உஷ்ணம் தணியாத
வெப்பக் காற்றை கேட்பேன்
எங்காவது உன் முகம் பார்த்தாயா என.
என் ஒவ்வொரு தூண்களும் உன் ஞாபகங்களுடன்...
நீ உண்ணாத நாட்கள்,
உறங்காத இரவுகள்,
கண்ணீர் விட்டழுத
கணப்பொழுதுகள்,
கைதட்டிச் சிரித்த காட்சிகள்.
அத்தனையும் என்னுள்
இன்னமும் பசுமையான நினைவுகளாய்...
பச்சை ஆடைகட்டிய
இந்த வாசலை தாண்டி அந்த
எச்சில் துச்சாதனர்கள்
என்னை முதன் முதல் தீண்டிய
அந்தக் கணப் பொழுதில்
உணர்ந்து கொண்டேன்
நீ வெகு தூரத்தில் என்று...
இருப்பினும் நீ நெருப்பின் மைந்தன்!
என்றோ ஒரு நாள்
இந்தக் கோவிலில்
விளக்கு உனக்காக எரியும்
அந்த நாள் வரையும்
உன் நினைவுகளுடன்....