இயன்றவரையில் இனிதாய் பேசு...

உதிர்த்த வார்த்தைகள்
மீண்டும் வாய் புகாது
செவிக்குள் நுழைந்த வார்த்தைகள்
வெளியேறாது

இயன்றவரையில்
இனிதாய் பேசு
இல்லையென்றால்
வாய்க்கிடுவாய் பூட்டு

பண்பட்டு பேசும்
மனிதர் சொல்லால்
பிறர் மனம்
புண்பட்டு என்றும் போகாது

புண்பட்டு பேசும்
பேச்சுக்களால்
மமதை மனிதர்க்கு
புண்ணியமொன்றும் சேராது

வாழும் காலம்
சொற்பம் என்றே
நினைப்பவர்
சுடுசொல் உரைப்பதில்லை

நிலையற்ற வாழ்வை
நிலையென்று நினைப்பவர்
நெஞ்சில் சொல்லீட்டி
பாய்ச்சி திரிகின்றார்

ஏறிய நிலையினில்
இறுமாப்பாய்
இறங்கிய நிலையினை
இகழாதே

ஏற்றம் இறக்கம்
வாழ்வினில் உண்டு
இரண்டிலும் சமமாய்
வாழுதல் சால நன்று...

எழுதியவர் : சொ. சாந்தி (7-May-13, 12:49 pm)
பார்வை : 134

மேலே