சுதந்திரமும் அரசியலும் பகுதி 6

கெடுதல் -
எவருக்கும் பயனில்லா
செயல் விளைவு.

எவருக்கேனும் பயனுள்ள
செயல் விளைவு
நன்மை என்றாகிறது

ஆதரவு அளித்த மக்களிடம்
நன்றிக் கடன் படாமல்,
வெற்றி பெற்றது தமது
உரிமை என்றும்
வெற்றி பெற்ற பின்
மக்களை முட்டாள்களாக
எண்ணும் சிந்தனைகளாலும்,

வெற்றி பெற்ற பின்பு,
அனைத்து மக்களுக்கும்
நன்மை செய்ய இயலாது
எனும் மேதாவித்தன புரிதலும்தான்
அரசியல் வாதியை
திசை திருப்பி வழி நடத்துகிறது.

அங்கு வரும் திசை திருப்பம்,
ஆதரவு தந்த மக்களிடம் இருந்து
வெகு தொலைவு
கொண்டு செல்கிறது
அரசியல்வாதியை.

காரணம்-

மீண்டும் மக்கள் ஆதரவு
கிடைக்கப்போவதில்லை
எனும் அசைக்க முடியாத நம்பிக்கை
பிறந்து விட்டிருக்கலாம்

அன்றியும்
இவர்களை மீண்டும்
சிலபல வாக்குறுதிகளை
அள்ளித்தெளித்து
ஏமாற்றிவிடலாம்
எனும் அதிமெத்தன
சிந்தனையயாக இருக்கலாம்.

அன்றியும்
இது போன்ற
வெற்றி பெற்ற வாய்ப்புகள்
இனி கிடைக்காமல் போய்விட்டால்
அதனால்
இப்போதே சுயநலத் தேவைகளை
அனைத்தையுமே
பூர்த்தி செய்து கொள்வது
பிழைக்கத்தெரிந்த புத்திசாலித்தனம்
எனும் புரிதலாகக் கூட
இருக்கலாம்.

இதைத்தான்
புரிதலின் பேதமை என்பது.

தொடரும்.......................

எழுதியவர் : மங்காத்தா (7-May-13, 1:10 pm)
சேர்த்தது : மங்காத்தா
பார்வை : 42

மேலே