காதல் கவிதை

பச்சைக் கிளி ஒன்று பறந்து வந்தது
இச்சை என்மீது என்றே நினைத்தேன் !

சட்டென கேள்வி ஒன்றை கேட்டது
பட்டென சிலிர்த்து பார்த்தது என்னையே !

காதல் கவிதையே வாராதா உன்சிந்தையில்
சோகமும் சமூகமும் என்றும் தொடருதே ஏன் !

சிரித்துக் கொண்டேன் நானும் நிமிராமல்
சிந்திப்பது போலவும் நடித்தேன் சில நிமிடம் !

அனுபவுமும் இல்லை ஆர்வமும் இல்லை
ஆற்றலும் இல்லை ஆளை தேடவும் இல்லை !

என்னைப் பார்க்கும் நங்கையும் இல்லை
பின்எப்படி வரும் காதல் கவிதைகள் என்றேன் !

பாதகமில்லை பரவாயில்லை ஆனாலும்
பார்த்ததை கேட்டதை எழுதலாமே என்றது !

பார்த்து எழுதும் பழக்கமும் இல்லை எனக்கு
கேட்டதை எழுதும் ஞானமும் இல்லை எனக்கு !

பருவமும் கடந்திட்டேன் நான் இனிரசித்து எழுத
உருவமும் இல்லை பார்ப்பவர் ரசித்திட எனக்கு !

காதல் கவிதைகள் நாளும் கொட்டுகிறதே
எழுத்து தளத்தில் எண்ணிக்கையும் கூடுகிறதே !

சிந்தையில் எனக்கு சமுதாயக் கவலையே
விந்தையா உனக்கு எந்தன் கவிதைகள் !

விடியலும் வேண்டும் விழித்திடவும் வேண்டும்
இனி இளைய தலைமுறை சிந்திக்கவும் வேண்டும்

நினைவுக் கூறத்தான் நாளும் எழுதுகிறேன் நானும்
நாளைய தலைமுறை நன்றாய் வாழ்ந்திடவே !

சிறகுகளை விரித்தது அலகையும் அசைத்தது
புரிந்த காரணத்தால் விரைந்து அடைந்தது வானை!


( நண்பர் ஒருவர் கேட்திருந்தார் , காதல் கவிதையே
எழுத வராதா என்று . அதற்கு பதில்தான் இக் கவிதை )


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (7-May-13, 6:43 pm)
Tanglish : kaadhal kavithai
பார்வை : 88

மேலே