சாதியால் தமிழன் சாதித்தது என்ன?

சாதி என்பார்கள்
உயர்சாதி
தாழ்சாதி
இடைசாதி
உட்சாதி
உட்சாதிக்குள் ஒரு உட்சாதி..

என்ன இங்கே நடக்கிறது..
சாதிக்கடை வைத்து
நடத்தும்
சாதனைதான்
தமிழன் சாதனையா?

இணைந்த கைகள்
இருக்கும்போதே
இருளில் மனிதனை
தள்ளும் உலகில்
மனதை நஞ்சால்
பிரித்தால் தமிழா
நீ நாளை என்ன ஆவாய்...

அறிவியல் உலகில்
இன்னும் நீ
எருமை மாட்டின்மீது
சவாரி செய்வதா?

இப்படியே போனால்
ஒரு நாய்க்குக் கூட
நீ யாரென்று
அடையாளம் தெரியாமல் போவாய்...

நாடுகளெல்லாம்
தம் மக்களை
சாதிக்கத் தூண்டி
போராடும்போது
நீ
சாதிக்காகத்தூண்டும்
சாதனைதான் என்ன?

விலங்குக்கும்
மனிதனுக்கும்
உள்ள
வித்தியாசத்தில்
நீ
மனிதனைப்போல் இல்லாமல்
மாறிவிட்டாயே...

நாளைய தமிழன் என்னாவான்
நாளைய தமிழகம் என்னாகும்
நினைத்தால் நெஞ்சில்
தீவந்து எரிகிறது.

எழுதியவர் : vimal (7-May-13, 6:44 pm)
பார்வை : 88

மேலே