யோசித்தால் யோசிக்க வைப்பவை (7)

ஒருவரின் பிறப்பும் இறப்பும் மட்டுமே உண்மை
பொய்யானதே வாழ்க்கை ..................

வெற்றுக் கல்லை பாத்தாலும் கவிதை வரும்
கண்றாவித்தான் இந்த காதல் .....................

எந்த ஒரு செயலின் தொடக்கமும் முடிவும்
இறைவன் கையில் ..இரண்டிற்கும் இடையில் இருப்பது உனது முயற்சியே ......

கடவுள் தூணிலும் இருப்பார் ..துரும்பிலும் இருப்பார் - அப்போ கோவில்ல ............

எந்தன் கற்பனையையும் மிஞ்சி விடுகிறாய்
கையில் எடுத்த கணத்திலே .. பேனாவின் கிறுக்கல்

மழையே உந்தன் வாழ்நாள் ஈசலைவிட குறைவுதான் -பிறந்த அடுத்த நொடியே
மண்ணில் புதைந்து போகிறாயே ....

எந்த மனுநீதி சோழனின் தண்டனையோ ....
நெடுஞ்சாலையின் மேல் இத்தனை தேர்கள் .....

உன் இதயத்திற்கு நான்கு அறையாம்
எனக்கு மட்டும் ஏன் கல்லறை ..............

பணமிருந்தாலும் படுத்தா எழும்பித்தான் ஆகணும் இல்லேன்னா பிணம் ...........

இதயம் நேருங்கும்போது சத்தம் குறையும்
இடைவெளி அதிகரித்தால் சத்தம் அதிகரிக்கும்
இது தான் சமாதானம் சண்டை....


................................................................(தொடரும் )

எழுதியவர் : bhanukl (7-May-13, 9:23 pm)
பார்வை : 140

மேலே