இளைஞர்களே இளைஞர்களே

வம்பிழுக்கும் காளையரே
மதுவில் மயங்கும் இளைஞர்களே
ஊர் சுற்றும் சோம்பேறிகளே
உருப்படியானதை கொஞ்சம் செய்யுங்கள் !

தெம்பு கொண்ட நீங்க எல்லாம்
ஒன்று கூட படையும் அஞ்சும்
நல்லதற்கு ஒன்று சேர்ந்து
நாட்டிற்க்கு நலம் சேர்த்திடுங்கள் !

இமயம் சிதைக்கும் வலிமை உண்டு
கடலை கடக்கும் திறமை உண்டு
உலகை ஆளும் அறிவும் உண்டு
உன்னதமானதை என்றும் தேடுங்கள் !

எழுதியவர் : சுந்தர விநாயகம் (8-May-13, 3:12 pm)
பார்வை : 98

மேலே