தாயின் மெல்லிய பாத ஒலி!
பச்சிளம் குழந்தை அழுகிறது,
பாலுக்கா! வேறு ஏதாவது காரணமா!
எனக்கு ஆவலாய் இருக்கிறது!
குழந்தை விம்மி விம்மி அழுகிறது,
பாலுக்கா! வேறு ஏதாவது காரணமா!
எனக்கு கவலையாய் இருக்கிறது!
இப்பொழுது தேம்பித் தேம்பி அழுகிறது,
பாலுக்கா! வேறு ஏதாவது காரணமா! – என்னவாய்
இருக்கும்! எனக்கு ஒரே யோசனை!
தேம்பி அழும் குழந்தை கீச்சிடுகிறது,
பாலுக்கா! வேறு ஏதாவது காரணமா! - என் ஆர்வம்
என்னை விரல் நுனியில் நிற்க வைக்கிறது!
குழந்தையின் கீச்சழுகை சிரிப்பாக மாறிவிட்டது,
எனக்கும் புரிந்து விட்டது – அதோ
தாயின் மெல்லிய பாத ஒலி!