உறவுகள் இறப்பதில்லை !
உறவுகள் ஒரு போதும் இறப்பதில்லை
நீ வாழும் வரை வாழும் !
உரிமை கொண்டு நிலைக்கும் இது
வாழ்வு நிலையும் , தாழ்வும் !
தொப்புள் கொடியில் தொடங்கி
உறவாய் பல கோணங்களில்
இறைவன் தந்த வாழ்க்கை நிஜம்
மண்ணில் வாழும் மனிதனோடு
இதை மறந்து தற்பெருமை பேசும்
மனிதன் மாறிய நிலை கொண்டு
நான், என்னால் ஒரு தலைக்கனம்
தன்னுள் வளர்ந்து நின்று
உறவை என்றுமே அணைத்து கொள்
உதவும் ஒரு நாள் உனக்கு என்று
விசாலமான எண்ணம் உன்னிடம் இல்லை
உறவை குறை கூறாதே தொல்லை என்று
உன் வீட்டு நல்லதுக்கு முதலில் நிற்கும்
எதிர் வரும் கெட்டதிலும் பங்கு கொள்ளும்
வளமாக வாழும் போது உதவு - உன்
தாழ்வு நிலையில் அணைத்து கொள்ளும்
எல்லா உறவுகளையும் ஒரே நிலையில் பார்
வேற்றுமை நாளை வேறுபடுத்தும் உன்னை
உறவுக்கு துரோகம் செய்யும் எண்ணம்
உனக்கே பேரிடியாக இறங்கும் ஒரு நாள்
உதாசீனப்படுத்தும் உறவுகளோடு நீ
உறவாக இருக்க தகுதி இல்லை
உறவுக்கு கை கொடு உரிமையோடு - உன்
உரிமைக்கு குரல் கொடுக்கும் தோளோடு
உறவுகள் !
முற்று பெறாத இந்த தொடர்ச்சி - உன்
இறுதி ஊர்வலம் வரை உரிமையோடு !
ஸ்ரீவை.காதர்.