விலை மகள்

ஒரு நாள்
விலை மகளாய்
இருந்து பார்...
கண்ணாடி உமிழும்
எச்சிலின் வலிமை
தெரியும்...
வியர்வை நாற்றமும்
வயிற்றுக் குமட்டலும்
வேதியியல் மாற்றமும்
வேண்டாத தோற்றமும்....

வலித்தாலும்
சிரித்தபடியே...
முகம் சுழிக்காமல்
களித்தபடியே....
அடக்கி வைத்து விடியலில்
எடுத்து விடும்
வாந்தியை யாரறிவார்....

கரப்பான் பூச்சிகளின்
கால்களில்
பயணிக்கும்
இந்த வாழ்க்கையில்
அம்மணமாய்
சிரிக்கிறது
காந்தி நோட்டு....

எழுதியவர் : கவிஜி (8-May-13, 8:56 pm)
Tanglish : vilai magal
பார்வை : 362

மேலே