அன்புள்ள தங்கைக்கு ....

அந்த வானம் முழுதும்
நட்சத்திரங்கள்
கொட்டிக் கிடப்பதுண்டு ;

என் வாழ்க்கை முழுதும்
உன் சிரிப்பு
சிதறிக் கிடந்தது இன்று;

பள்ளி முடிக்கும் காலம் வரையில்
பல நண்பர்கள் பழக்கம் உண்டு ;

ஆனால் நீயோ ,
என் ரத்தத்தில் கலந்தவள் ,
நான் தந்த
முத்தங்களில் வளர்ந்தவள் ;

உன் புன்சிரிப்பை விடவும்
சிறந்ததோர் பொம்மை
எனக்கு வேறெங்கும்
கிடைத்தது இல்லை ;

என் விரல் பிடித்து
நீ நடைபழகிய தருணங்கள்
இன்றும் நகரவில்லை
என் நினைவிலிருந்து ;

நாம் போட்ட சண்டைகளுக்கு ,
சமாதனம் ஏதும் தேவையில்லை ;

நான் ஊட்டிய
பால்சாதமும் ,
நீ ஊட்டிய
எச்சில் பண்டமும் ,
விரதத்தை தீர்த்து வைத்த
தீராத வரங்கள் ;

வேறெங்கும் எனக்கு
இல்லை எதிரி ,
சிலநேரங்களில் அதுவும்
நீதானே சகோதரி ;

அன்னை போல்
உன்னை அணைத்துக்கொள்ள ,
பிள்ளை போல்
உன் மடியில் தூங்க
என்றும் நான் இருப்பேன்
உன்னோடு ...........

எழுதியவர் : ஆர்த்தி vicky (8-May-13, 9:56 pm)
Tanglish : anbulla thangaiku
பார்வை : 178

மேலே