கால் செருப்பின் பெருமிதம்
கால்களுக்கு கீழே இருப்பேன்... நீ
கடக்கும் பாதையில் வருவேன்..!
தோல்களில் செய்த என்னை...
தொடவிடமாட்டேன் சேற்று மண்ணை..!
வித்தியாசமான வடிவத்தில் இருப்பேன்... நீ
விரும்பும் வழியில் வருவேன்..!
வெயிலுக்கு சுடாமல் காப்பேன்... நீ
வேகமாய் நடந்தால் உன்னுடனே வருவேன்..!